101 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்….!
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல். உள்ளது. இதன் பக்கவாட்டில் சில்வர் அக்சென்ட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் எளிமையான டிசைன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றம் மிக எளிமையாகவும், அதிநவீனத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- பியல் ஷாலோ புளூ, பியல் மிஸ்டி வைட், பியல் செரினிட்டி புளூ, மேட் ஃபாகி சில்வர் மெட்டாலிக் மற்றும் பியல் இக்னியஸ் பிளாக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
Comments are closed.