4ஜி, டபுள் டிஸ்பிளே, 1450mAh பேட்டரி.. இந்தியாவில் HMD Barbie Flip Phone..

நோக்கியா (Nokia) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, சில தினங்களுக்கு முன்னர் தான் அதன் சொந்த பிராண்டிங்கின் கீழ் 4 புதிய பீச்சர் போன்கள் மற்றும் 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது.

எச்எம்டி பார்கா 3210 (HMD Barca 3210), எச்எம்டி 2660 பிளிப் (HMD 2660 Flip), எச்எம்டி 130 மியூசிக் (HMD 130 Music) மற்றும் எச்எம்டி 150 மியூசிக் (HMD 150 Music) ஆகிய 4 புதிய பீச்சர் போன்களோடு சேர்த்து, எச்எம்டி பியூஷன் எக்ஸ்1 (HMD Fusion X1) மற்றும் எச்எம்டி பார்கா ஃப்யூஷன் (HMD Barca Fusion) ஆகிய 2 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின.

சத்தமில்லாமல் அறிமுகமான Vivo 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?”

 

தற்போது வரையிலாக இந்த 6 புதிய மாடல்களில் எதெல்லாம் இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும்? அவைகள் என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்? என்கிற விவரங்கள் பகிரப்படவில்லை. எப்படியும் இந்த 6 மாடல்களுமே கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும். ஏனென்றால் எச்எம்டி நிறுவனத்திற்கு – இந்தியா ஒரு முக்கியமான சந்தையாகும்.

இப்படியாக.. நோக்கியா ரசிகர்கள் மற்றும் பீச்சர் போன் விரும்பிகளின் கவனம் முழுக்க புதிதாக அறிமுகமான மாடல்கள் மீதிருக்கும் வேளையில், எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது அதன் எச்எம்டி பார்பி ஃபிளிப் போனின் (HMD Barbie Flip Phone) இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த போன் கடந்த ஆகஸ்ட் 2024 இல், சில பகுதிகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது எச்எம்டி நிறுவனம், அதன் பார்பி ஃபிளிப் போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை எக்ஸ் தளம் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விரைவில் அதுகுறித்த அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
எச்எம்டி பார்பி ஃபிளிப் போனின் முக்கிய அம்சங்கள் (HMD Barbie Flip Phone Specifications Features):

– 2.8-இன்ச் QVGA மெயின் டிஸ்பிளே

– 1.77-இன்ச் QQVGA கவர் டிஸ்பிளே

– 64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்

– யுனிசாக் டி107 சிப்செட்

– எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடனான 0.3எம்பி ரியர் கேமரா

– எஸ்30 பிளஸ் ஓஎஸ்

– பார்பி-தீம் யுஐ

– 1450mAh நீக்கக்கூடிய பேட்டரி

– ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் வரை டால்க்டைம்

– 4ஜி ஆதரவு

– ப்ளூடூத் 5.0

– 3.5மிமீ ஆடியோ ஜாக்

– யூஎஸ்பி டைப்-சி

இந்தியாவில் எச்எம்டி பார்பி ஃபிளிப் போனின் விலை நிர்ணயம் (HMD Barbie Flip Phone Price in India) எப்படி இருக்கும்? அமெரிக்காவில் எச்எம்டி பார்பி ஃபிளிப் போனின் விலை நிர்ணயம் $129 ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.10,800 ஆகும். இதேபோன்ற விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். அதாவது இது ரூ.10,999 க்கு அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

“NOKIA ஐயா நீங்களா இது.. 32GB மெமரி, டபுள் டிஸ்பிளே, 1450mAh பேட்டரி.. Detox Device ஆக HMD 2660 Flip அறிமுகம்!”

 

சில தினங்களுக்கு முன் அறிமுகமான எச்எம்டி 2660 ஃபிளிப் போன் 2025 மாடலின் முக்கிய அம்சங்கள்:

– 2.8-இன்ச் QVGA மெயின் டிஸ்பிளே

– 1.77-இன்ச் கவர் டிஸ்பிளே

– நம்பர்களுக்கான பெரிய பட்டன்கள்

– டி9 மெசேஜிங் ஆதரவு

– ஃபிளிப் டு ஆன்சர் கால் அம்சம்

– 0.3எம்பி சிங்கிள் ரியர் கேமரா

– கேமரா ஃபிளாஷ்; அதுவே டார்ச் எல்இடி லைட் ஆகவும் செயல்படும்

– ப்ளூடூத் 4.2 மற்றும் வோல்ட்இ (VoLTE) ஆதரவு

– 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்

– மைக்ரோ எஸ்டி கார்டுகளுக்கான ஆதரவுடன் 32ஜிபி வரை விரிவாக்கக்கூடியது

– இன்-பில்ட் எப்எம் ரேடியோ ஆதரவு

– 1450mAh நீக்கக்கூடிய பேட்டரி

– யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் ஆதரவு

- Advertisement -

Comments are closed.