குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று 7.93 லட்சம் பேர் எழுதுகின்றனர்…!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. குரூப் 2ஏ பதவிகளில் உள்ள 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த ஜூன் மாதம் வௌியிட்டது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக 7,93,966 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2,763 தேர்வு மையங்களில் இன்று 7.93 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

- Advertisement -

Comments are closed.