திருவண்ணாமலையில் நிலச்சரிவால் 7 பேர் சிக்கிக் கொண்டனர் , மீட்புப் பணியில் NDRF வீரர்கள்…!

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . புயல் கரையை கடந்த நிலையிலும் தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையிலிருந்து சரிந்த பாறைகள் வீடுகள் மீது விழுந்தன. மண்ணில் புதைந்த வீட்டிற்குள் 5 குழந்தைகள், இரண்டு பெண்கள் என 7 பேர் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

Comments are closed.