72 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 72 ஜிபி டேட்டா.. ரூ.719-க்கு இறக்கிய விஐ!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு மூன்று மாதத்துக்கு கொஞ்சம் கம்மியான வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 72 ஜிபி டேட்டா (72GB Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) சலுகைகளுடன் அடிமட்ட விலைக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கிடைக்கிறது. இதேபோல கூடுதல் டேட்டா சலுகைகளுடன் 77 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு சலுகைகளை பார்த்துவிட்டு, ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

வோடபோன் ஐடியா ரூ 719 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 719 Plan Details): வோடபோன் ஐடியாவில் தினசரி டேட்டா மட்டுமல்லாமல், பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் போன்ற கூடுதல் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகைகள் கிடைக்காது. அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், தினசரி டேட்டா மட்டுமே கிடைக்கிறது.

இனிமே ஒரே ரீசார்ஜ்.. 70 நாளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 105 ஜிபி டேட்டா.. Jio கஸ்டமர்களுக்கு அடிச்சது லக்கு!”

ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை தவிர மற்ற சலுகைகள் கிடைக்காது. நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை கொடுக்கிறது. ஆகவே, 72 ஜிபி டேட்டாவை மொத்தமாக கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன, கூடவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. மலிவான விலைக்கு டேட்டாவுடன் நல்ல வேலிடிட்டி வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யுங்கள். கூடுதல் டேட்டாவுக்கு அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.

வோடபோன் ஐடியா ரூ 799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 799 Plan Details):

முந்தைய திட்டத்தை போலல்லாமல், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா மட்டுமல்லாமல், பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகைகள் வருகின்றன. இதுபோக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் வருகிறது.

இறங்கி அடிச்ச Airtel.. ரூ.59 டேட்டா பேக் அறிமுகம்.. இனிமே சனி, ஞாயிறு ஒரே ஜாலிதான்.. ஏன்?”

ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 77 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்களில் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது முந்தைய திட்டத்தைவிட 500 எம்பி டேட்டா அதிகமாக வருகிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த 1.5 ஜிபிக்கு பிறகு கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இரவு முழுவதும் இலவச டேட்டாவை பெறலாம்.

அதாவது, பிஞ்ச் ஆல் நைட் சலுகை மூலமாக 1.5 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் இலவச டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 1.5 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்தாமல் இருந்தால் அதை வார இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ள வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை அனுமதி கொடுக்கிறது.

இந்த டேட்டா சலுகைகள் போதாமல் இருந்தால், ஒவ்வொரு 30 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டாவை பேக்கப் டேட்டாவாக கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகளுக்கு பிறகே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் 77 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது.

- Advertisement -

Comments are closed.