பட்ஜெட் விலையில் டேப்லெட் – அறிமுகம் செய்த ரியல்மி….!
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட்- ரியல்மி டேப் 2 லைட் மாடலை அறிமுகம் செய்தது. ரிப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மெல்லிய டிசைன் மற்றும் வீகன் லெதர் ஃபினிஷ் கொண்ட புது ரியல்மி டேப் 8300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட்-இல் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Comments are closed.