குரங்கம்மை தடுப்பூசிக்கு உலக சுகாதார நிலையம் ஒப்புதல்…
ஆப்ரிக்க நாடான காங்கோவில் ‘எம் பாக்ஸ்’ எனப்படும் குரங்கம்மை பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆப்ரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. இந்நிலையில் குரங்கம்மைக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த, ‘பவாரியன் நார்டிக்’ எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்தது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் உலக சுகாதார நிலையம் அந்த தடுப்பூசிக்கு நேற்று ஒப்புதல் வழங்கியது. அந்த ஒப்புதலில், இந்த ஊசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது பயன்படுத்த வேண்டும். இரண்டு டோஸ்களாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
Comments are closed.