பேரறிஞர் அண்ணா ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்…
எக்ஸ் வலைத்தளத்தில் த.வெ.க, தலைவர் விஜய் பதிவு
பேரறிஞர் அண்ணாவின் 116-ஆவது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் எக்ஸ் வலைத்தளத்தில் டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது, ‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தார், பேரறிஞர் அண்ணா. அவரின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments are closed.