திருச்சி எஸ்.பி. வருண்குமார் உட்பட 107 பேருக்கு அண்ணா பதக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கைரேகை பணியகம், தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆகியவற்றில் அர்ப்பணிப்புடனும், சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய அதிகாரிகளுக்கு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உட்பட 107 பேருக்கு இந்தாண்டுக்கான அண்ணா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதக்கங்களை பெறுவோருக்கு வெண்கலப் பதக்கமும், ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. சிறப்பாக பணியாற்றி வரும் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ், புகார்கள் மற்றும் பிரச்னைகளுக்கு துணிச்சலாகவும், தைரியமாகவும் நடவடிக்கை எடுப்பவர் என பெயர் பெற்றவர்.

- Advertisement -

Comments are closed.