தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் அதிகரிக்கும்-வானிலை ஆய்வு மையம்…!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உஷ்ணம், கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தென்மேற்கு காற்று குறைந்ததன் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

- Advertisement -

Comments are closed.