வெற்றிகரமாக நிறைவடைந்த விண்வெளி சுற்றுலா : ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை…
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனியார் விண்வெளி பயணத்தைக் கடந்த 11ஆம் தேதி (11.09.2024) தொடங்கியது. இதற்காக பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்ட போலரிஸ் டான் என்ற விண்வெளி விமானம் மூலம் பால்கன் 9 என்ற ராக்கெட்டில், அமெரிக்காவைச் சேர்ந்த ஐசக்மேன், ஸ்கார் போடீட், ஷாரா கில்லீஸ் மற்றும் அன்னா மேனன் ஆகிய 4 பேர் விண்வெளிக்குச் சென்றனர். இதனையடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 4.22 மணிக்கு கேப்ஸ்யூலில் இருந்து வெளியேறிய ஜாரெட் ஐசக்மேன் என்பவர் முதல் நபராக விண்வெளியில் ஸ்பேஸ் வாக் (space walk) என்ற விண்வெளி நடை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஜாரெட் ஐசக்மேன் உடன் மற்ற மூவரும் சேர்ந்து சுமார் ஒன்றை மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் நடை மேற்கொண்டனர். இதன்மூலம் விண்வெளியில் நடை மேற்கொண்ட முதல் மனிதர் என்ற பெருமையை ஐசக்மேன் பெற்றிருக்கிறார். இது தொடர்பான காணொளிகள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த காணொளி உலகம் முழுவதும் வைரலானது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நீடித்த விண்வெளி சுற்றுலா பயணம் முடிந்து 4 பேரும் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
பிளோரிடா மாகாணத்தில் உள்ள கடலில் பாராசூட்களின் உதவியோடு அந்த விண்கலம் பத்திரமாக விழுந்தது. போலாரிஸ் டாவ்ன் என்று பெயரிடப்பட்டு இந்த பயண திட்டத்தின் மூலம் பலநூறு கிலோமீட்டர் உயரத்தில் வணிக ரீதியிலான விண்வெளி நடை நிகழ்வை சாத்திய படுத்திய முதல் தனியார் ராக்கெட் நிறுவனம் என்ற சாதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் படைத்துள்ளது.
Comments are closed.