பிரதமர் மோடியின் உருவத்தை தொடர்ந்து 12 மணிநேரம் வரைந்து சென்னை மாணவி உலக சாதனை!!!…
சென்னை கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதாப் செல்வம் – சன்கீராணி தம்பதியின் 13 வயது மகள் ப்ரெஸ்லே ஷேகினா என்பவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். ஓவியம் வரைதலில் ஆர்வமிக்க இவர், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்தை தானியங்களைப் பயன்படுத்தி வரைய முடிவு செய்துள்ளார். அதன்படி, தொடர்ந்து 12 மணிநேரம், 800 கிலோ தானியங்களைப் பயன்படுத்தி, 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் பிரமாண்ட ஓவியத்தை வரைத்துள்ளார். காலை 8.30 மணிக்கு ஓவியத்தை வரையத் தொடங்கிய சிறுமி, இரவு 8.30 மணிக்கு அதனை முடித்துள்ளார். தானியத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஓவியத்தை வரைந்த சிறுமியின் இந்த முயற்சி யுனிகோ (UNICO) உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுமிக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Comments are closed.