இந்த வாரம் ஓடிடியில் ரிலீசான சூப்பர் படங்கள்..! மிஸ் பண்ணிடாதீங்க..

இந்த வாரம் OTTயில் பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன.உங்களுக்கு பிடித்த மூவீ மற்றும் வெப் சீரிஸ் நெட்ப்ளிக்ஸ், zee5, disney+hotstar போன்ற தளத்தில் பார்த்து மகிழலாம். ரகு தாத்தா (Raghu Thatha) கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரகு தாத்தா. இந்த படம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியாகி உள்ளது. விஜய் மில்டன் இயக்கியுள்ள “கோலிசோடா ரைசிங் (Goli soda rising)” வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸ் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த வெப் சீரிஸில் கோலி சோடா திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். Sector 36:2006-ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட நொய்டா வழக்கு இந்தத் தொடரில் காட்டப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ்ல் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகி உள்ளது. தலவன் (Thalavan ):இயக்குநர் ஜிஸ் ஜாய் இயக்கத்தில் பிஜுமேனன், ஆசிஃப் அலி நடித்துள்ள மலையாள படம் ‘தலவன்’. செப்டம்பர் 12-ம் தேதி Sony LIV ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த படத்தை மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழிகளில் பார்க்க முடியும். Mr. Bachchan: ஹரிஷ் ஷங்கர் நடிப்பில் இந்திப் படமான ரெய்டு படத்தின் தெலுங்கு ரீமேக் படமான Mr பச்சன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் இப்பொழுது ஒரு மாதத்திற்க்கு பிறகு OTTயில் செப்டம்பர் 12 வெளியாகிவுள்ளது. Khalbali Records: இது ஒரு இசைத் சீரிஸ் இதில் 30க்கும் மேற்பட்ட இந்திய இசைக்கலைஞர்கள் பங்களித்துள்ளனர். இந்த இசை சீரிஸ்சை செப்டம்பர் 12 முதல் ஜியொசெனிமா யில் பார்க்கலாம். Bench Life:பெஞ்ச் லைஃப் என்பது ஐந்து அலுவலக சக ஊழியர்களின் கதை. இதை SonyLIV இல் செப்டம்பர் 12 முதல் கண்டுகளிக்கலாம்.

- Advertisement -

Comments are closed.