டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு…
புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷி (43) முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை ராஜினாமா செய்கிறார். ஆளுநரை மாலை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கும் கெஜ்ரிவால், சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வான விவரத்தையும் அளிப்பார். இதன் பின்னர் புதிய முதல்வர் அதிஷி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு குறித்த விவரங்கள் வெளியாகும். டெல்லி முதலமைச்சராக பதவியேற்கும் 3ஆவது பெண் அதிஷி மர்லேனா ஆவார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித்தை தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக அதிஷி பதவியேற்க உள்ளார்.
Comments are closed.