பிரதமரின் கல்வி உதவித் தொகை – முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்….!
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் 2024-25-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் பிளஸ்-2 வகுப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்கள் www.ksb.gov.in இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். எனவே இந்த கல்வியாண்டில் அங்கிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு திருச்சி முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார்(ஐ.ஏ.எஸ்) தெரிவித்துள்ளார்.
Comments are closed.