விராட் கோலியுடன் ராதிகா சரத்குமார் சந்திப்பு! வைரலாகும் புகைப்படம்…!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் நடிகை ராதிகா சரத்குமார் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ராதிகா சரத்குமார். சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், விமான பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை ராதிகா சரத்குமார் சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மில்லியன் கணக்கான இதயங்களில் இருப்பவர் விராட் கோலி. லண்டனிலிருந்து சென்னை திரும்பும் பயணத்தில் அவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. அவரது விளையாட்டு ஆர்வத்தால் நம்மை பெருமை பட வைத்தவர். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள். செல்ஃபி புகைப்படத்திற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Comments are closed.