சட்னி சாம்பார் இல்லாமல் இட்லி சாப்பிடும் போட்டி : கலந்து கொண்ட முதியவர் மரணம்…

இந்திய மாநிலமான கேரளா, கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையையொட்டி இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இல்லாமல் இட்லியை சாப்பிட வேண்டும். அந்தவகையில், இந்த போட்டியில் மொத்தம் 60 பேர் பங்கேற்றனர். அதன்படி, 50 வயதான முதியவர் ஒருவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் 3 இட்லியை ஒரே நேரத்தில் உண்டதால், தொண்டையில் இட்லி சிக்கியதால் மயங்கி கீழே விழுந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Comments are closed.