திருப்பதி கோவிலுக்கு ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை- அமுல் நிறுவனம் விளக்கம்!…
திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Comments are closed.