ஓடிடியில் மிரட்ட வரும் டிமான்ட்டி காலனி 2.. ரிலீஸ் தேதி தெரியுமா?
பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் சொதப்பல்கள் ஏகப்பட்டவை இருக்கும். பார்ட் 2 வரிசையில் சிக்கி பல படங்கள் சின்னாபின்னாமாகியிருக்கின்றன. அதேபோல் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’வும் மாட்டிவிடுமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் அஜய் ஞானமுத்து படத்தின் இரண்டாவது பாகத்தை நன்றாகவே உருவாக்கியிருந்தார். தியேட்டரில் சக்கைப்போடு போட்ட ‘டிமான்ட்டி காலனி 2’ எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி ‘டிமான்ட்டி காலனி 2’ படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்புபோல் கண்டிப்பாக ஓடிடியிலும் கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்கிறது.
Comments are closed.