நாளை மறுநாள் வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை…!

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வளி மண்டல சுழற்சியின் தாக்கத்தால் வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்’ என இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதன் தாக்கத்தால் வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

Comments are closed.