கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி…!

இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி இதுவரை 24000 நடன ஸ்டெப்புகளை 537 பாடல்களில் 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர்.இந்த விருதை நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார். விருதை பெற்ற சிரஞ்சீவி ” என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனையெல்லாம் செய்வேன் என எதிர்பார்த்தது இல்லை. இது தற்செயலாக அமைந்த ஒன்று. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு மற்றும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நடிப்பதைவிட நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால் கூட எனக்கு இந்த விருது கிடைத்திருக்கலாம்.” என கூறினார்.

 

 

 

- Advertisement -

Comments are closed.