இன்ஸ்டாவில் இருந்து மனைவியின் புகைப்படங்களை நீக்கிய ஜெயம் ரவி…

செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார். இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று அவரது மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.  சில மாதங்களுக்கு முன் ஆர்த்தி தன் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்த ஜெயம் ரவியின் புகைப்படங்களை நீக்கினார். இதுவே, சந்தேகத்திற்கு வழி வகுத்தலும் ஜெயம் ரவியின் கணக்கில் அவரும், ஆர்த்தியும் இருக்கும் புகைப்படங்கள் அப்படியே இருந்தன. ஆனால், ஜெயம் ரவி தன் இன்ஸ்டாகிராம் கணக்கை மனைவியின் குடும்பத்தினரே நிர்வகித்து வந்ததாகக் கூறினார். தற்போது, ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்த மனைவி, மகன்களின் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளது. இறுதியாக, அவர் பதிவிட்ட தன் புகைப்படத்துடன், ‘புதிய நான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Comments are closed.