வழக்கத்தை விட அதிக விற்பனையாகும் திருப்பதி லட்டு TTD முக்கிய தகவல் வெளியீடு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் புனித திருத்தலமான திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்-ல் விலங்கு கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தினமும் குறைந்தது 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்க்கும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், இந்த சர்ச்சைக்கு பின்பும் பக்தர்கள் எண்ணிக்கையும், லட்டு பிரசாதத்தின் விற்பனையும் பாதிக்கவில்லை என TTD நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Comments are closed.