100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் சொல்வது இதுதான்…

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக கிளம்பிய தகவலுக்கு மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கான மின் இணைப்புகளில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.  இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இது பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாக தமிழ்நாடு மின்சார வாரியம் அதை மறுத்துள்ளது. இதுபற்றிய விளக்கம் ஒன்றை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் உண்மையல்ல, நம்ப வேண்டாம் என்ற தலைப்பில் மின் வாரியம் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது. அதில், ‘சமூகவலைதளங்களில் பரப்பப்படும் இந்த உண்மைக்கு மாறான செய்திகளை நம்பக்கூடாது. எங்களின் அதிகாரப்பூர்வ தளங்களை பார்க்கவும்’ என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

Comments are closed.