மாரி செல்வராஜின் `வாழை’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் வாழை . இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் அவரது வாழ்வின் சோகத்தையும், மகிழ்ச்சியையும், பார்த்த அனுபவத்தையும் இப்படத்தின் மூலம் பகிர்ந்திருந்தார். படத்தின் ஓடிடி அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 11 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
Comments are closed.