திருச்சி அதவத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்…
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி மன்னார்புரம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 03/10/2024 காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விஸ்தரிப்பு, குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, கீரீக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்தநகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, மோசரன்பேட்டை, அதவத்தூர், சாய்ராம்அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.