திருச்சியில் கார் மோதி குதிரை பலி…

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் ஆபீஸ் எதிரே மருங்காபுரியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காரில் இரண்டு குதிரைகள் மோதி விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் எதிரே எப்பொழுதும் எரியும் மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரியவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இருட்டாக இருக்கின்றது  அதிவேகத்தில் வந்த கார் இரண்டு குதிரைகள் மீது மோதி சம்பவ இடத்திலே இரண்டு குதிரைகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. குதிரைக்கு தண்ணீர் கொடுத்த நிலையில் ஒரு குதிரை இறந்து விட்டது. மற்றொரு குதிரை தற்போது உயிருக்கு போராடி கொண்டு உள்ளது. தற்போது மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

Comments are closed.