சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி ஜோடி..!!
சீனாவில் நேற்று நடைபெற்ற சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி, சாரா எர்ரானி ஜோடி-தைவானின் சான் ஹாவ் சிங், ரஷியாவின் வெரோனிகா ஜோடியுடன் மோதியது. இதில் இத்தாலி ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. சீனா ஓபன் தொடரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.