குறைந்த விலையில் அதிக ஊட்டசத்து : முட்டையின் மகத்துவம்…!
முட்டையில் 13 விதமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த புரத சத்து உள்ளிட்டவை உள்ளன. வேக வைத்த முட்டையில் சுமார் 21 கலோரிகள் மற்றும் வைட்டமின் ஏ, பி 5, பி12, பி6 டி மற்றும் பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் 6 கிராம் புரதம் மற்றும் 5 கிராம் கொழுப்பு உள்ளது. முட்டையை பொறுத்தவரை முழு முட்டையை சாப்பிடுவதுதான் நல்லது. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருப்பதாக கருதப்படுகிறது. இது பாஸ்போலிப்பிட்களின் நல்ல மூலமாகவும் அதாவது மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பு வகையை சேர்ந்ததாகும். ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் கூட எடுத்துக் கொள்ளலாம்.
Comments are closed.