வடகிழக்கு பருவமழை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை….

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதால், நாளை[15/10/24] வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால், சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் சென்னை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது,  இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னைக்கு இன்று மற்றும் நாளை கனமழை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.

 

- Advertisement -

Comments are closed.