9-வது மகளிர் டி20 உலகக் கோப்பையில்(14 அக்டோபர் 2024) , நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் 56 ரன்னில் ஆல்அவுட் ஆனது, இதனால் இந்தியாவின் அரையிறுதி கனவு சிதைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 10 அணிகள் இரண்டு பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. நியூசிலாந்து, டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யும் முடிவு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து, 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான், 111 ரனை அடிக்க வேண்டிய நிலையில், 56 ரன்னில் முடிந்தது. நியூசிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றதால் இந்தியாவின் கனவு பறிபோனது
Comments are closed.