மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு…
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2023-24 நிதியாண்டுக்கான உற்பத்தித்திறன் இணைக்கப்படாத போனஸுக்கான (அட் ஹாக் போனஸ்) அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் கீழ், குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளத்திற்கு இணையான தொகை போனஸாக கிடைக்கும். நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தகுதியான பணியாளர்களில், வேறு எந்த உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட்ட போனஸ் திட்டத்தின் பகுதியாகவும் இல்லாத, குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘பி’-இன் நான்-கெசடட் பணியாளர்கள் அடங்குவர்.’ என்று கூறப்பட்டுள்ளது.
Comments are closed.