“தமிழக வெற்றிக் கழகத்தில் ஆட்சி வழங்கப்படும்: விஜயின் உறுதி!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், பிரிவினைவாதம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என கூறி 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம் என்றும், நமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி வழங்கப்படும் என தெரிவித்தார்.
மாநாடு, விழுப்புரம் மாவட்டத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்றது. இதில், பெரியார், காமராஜர், அம்பேத்கர் மற்றும் வீரமிகு பெண்களை நினைவுகூர்ந்தார். அவர், மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி, பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம் என கூறினார்.
மாநாட்டில், லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Comments are closed.