குரூப் 4 தேர்வு முடிவுகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது, இதில் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அதில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் 7,247 மையங்களில் தேர்வு எழுதியனர். ஆரம்பத்தில் 6,724 காலியிடங்கள் இருந்தன, மேலும் 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது 8,932 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இன்னும் 2 நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. தேர்வு முடிந்த 3 மாதத்தில் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது
Comments are closed.