உதகை – குன்னூர் மலை ரெயில் சேவை இன்று ரத்து…

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், கனமழையால் மரப்பாலம், காட்டேரி பூங்கா, கரும்பாலம், சேலாஸ் உள்பட 6 இடங்களில் மண் சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. இதை சமாளிக்க பொக்லைன் எந்திரம் பயன்படுத்தி சாலையில் இருந்து மண், பாறைகள் அகற்றப்பட்டன. கனமழையால் குன்னூர் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது, இந்நிலையில் கனமழை காரணமாக உதகை-குன்னூர் மலை ரெயில் சேவை   இன்று ( 05-11-2024) ரத்து செய்யப்பட்டது

- Advertisement -

Comments are closed.