மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் விதி மீறல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் உள்ள விதி மீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், ‘கட்டடங்களுக்கு உயர கட்டுப்பாடு நிர்ணயித்த அரசாணையை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது’ என, மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. 2011ல் மதுரை குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோவிலுக்கு 1 கி.மீ. சுற்றளவில் 9 மீ. உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம், 1869 கட்டடங்களின் உரிமையாளர்கள், கட்டுமான திட்டங்களை உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மாநகராட்சி தரப்பு, 1997ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை தற்போது அமலில் இல்லை என தெரிவித்தது.
Comments are closed.