“தமிழக அரசின் புதிய பரிசு திட்டம்: ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்கான வாய்ப்பு!”

  தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்கான பரிசு திட்டத்தை அறிவித்துள்ளது விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2024-2025-ம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்தப்படும். 36 வயதுக்கு மேற்பட்ட 15 மூத்த கலைஞர்களுக்கு 20,000 ரூபாய் மற்றும் 35 வயதுக்குட்பட்ட 10 இளம் கலைஞர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்  கடைசி தேதி நவம்பர் 30. மேலும் விவரங்களுக்கு 044-28193195, 044-28192152 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

- Advertisement -

Comments are closed.