ஆதார்,பான் கார்டு தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!!..

ஆதார் கார்டை பான் அட்டையுடன் இதுவரை இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31க்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய கெடுவை விதித்துள்ளது.நாடு முழுவதும் வங்கிகணக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், ஆதார் அட்டையை இணைக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல, ஆதார், பான் இணைப்பு என்பது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டு உள்ளது.இந்த இணைப்பு நடவடிக்கைக்காக பலமுறை மத்திய அரசு கால அவகாசம் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில், டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் கார்டை, பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி உள்ளது.பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் பான் எண் உள்ளிட்ட விவரங்களை வைத்துக் கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்த தொடர் புகார்களையடுத்து மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

- Advertisement -

Comments are closed.