திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மேயர் அன்பழகன் ஆய்வு!!..

திருச்சி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மேயர் அன்பழகன் இன்று உதவி ஆணையர், செயற்பொறியாளர் சுகாதார அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்கவும், சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பிடம், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் ஒப்பந்ததாரர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.மேலும் நடைபாதைகளில் அங்கு உள்ள கடைக்காரர்கள் குப்பைத்தொட்டி வைக்காமல் நடப்பாதைகளிலேயே குப்பையை கொட்டி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதை அகற்றி கடைக்காரர்களுக்கு ரூ.2000 அபதாரம் விதிக்கப்பட்டது.அதேபோல் பொதுமக்கள் பேருந்து நிலைய பகுதிகளில் குப்பைகளை போட்டால் அபதாரம் விதிக்க சுகாதார அலுவலருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பேருந்து நிலையப் பகுதியை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார்.

- Advertisement -

Comments are closed.