தமிழ்நாட்டில் 16-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்ததன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்தது. இன்று 13-11-2024 காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுஇழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும்,இதனால் தமிழ்நாட்டில் வருகிற நவ . 16-ந் தேதி வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments are closed.