அரசு பஸ்களில் முன்பதிவு காலம் 90 நாட்களாக அதிகரிப்பு…!

தமிழகத்தில் தொலைதூர நகரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் பஸ்களில் டிக்கெட் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. கண்ணை மூடி திறப்பதற்குள் டிக்கெட்டுகள் காலியாகி விடுகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி இன்று மதியம் 12 மணி முதல் அமலுக்கு வருவதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

Comments are closed.