திருச்சி மாவட்டம் துறையூரில் நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதியம் விமானம் மூலம் வருகிறார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கருணாநிதியின் சிலை, நூலகம் மற்றும் அருள் நேருவின் தொகுதி அலுவலக திறப்பு விழா . அவரது வருகைக்கு முன்னதாக, சாலை இருபுறமும் கொடி தோரணங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை அடிக்கும் பணிகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள், துணை முதல்வரின் வருகையொட்டி மேற்கொள்ளப்படுவதால், மற்ற நாட்களில் ஏன் செய்யப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
Comments are closed.