ஐ.பி.எல். முதல் நாள் ஏலம்: டாப் 5 இடம்பிடித்த வீரர்களின் விவரம்..!!
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டமாக நடைபெற்றது.இந்நிலையில், முதல் நாளில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களின் விவரங்கள் : ரிஷப் பண்ட்: 27 கோடி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்,ஷ்ரேயஸ் அய்யர்: 26.75 கோடி – பஞ்சாப் கிங்ஸ், வெங்கடேஷ் அய்யர்: 23.75 கோடி – கொல்கத்தா நைட்ரைடர்ஸ்,அர்ஷ்தீப் சிங்: 18 கோடி – பஞ்சாப் கிங்ஸ், யுஸ்வேந்திர சஹல்: 18 கோடி – பஞ்சாப் கிங்ஸ்.ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். டாப் 5-ல் இடம்பிடித்த அனைவரும் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.