சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்..!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே 90 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கரையை கடக்கப்போகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையும் சூறைக்காற்றும் பெய்து வருகின்றன. இந்நிலையில், புயல் காரணமாக கனமழை கொட்டி வரும் நிலையில் சென்னை விமான நிலையம் இன்று மாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.