புதிய மாடலை அறிமுகம் செய்தது BMW நிறுவனம்…!

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய M2 மாடலை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ M2 விலை ரூ. 1.03 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட புதிய பிஎம்டபிள்யூ கார் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ M2 மாடலில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4 நொடிகளுக்குள் எட்டிவிடும் . இந்த அப்டேட் மூலம் புது M2 மாடல் 486 ஹெச்பி பவர், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

Comments are closed.