கடந்த வாரம் சனிக்கிழமை (நவம்பர் 30 2024) இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்த ‘ஃபெங்கல்’ புயல், வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் புகுந்தது இதனால் பல சேவைகள் முடக்கியது. இந்த பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் இரண்டாவது புயல் இதுவாகும்.
கடந்த சனிக்கிழமை (நவம்பர் 30 2024) மாலை 5:30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் ,ஏராளமான மழையைக் கொண்டு வந்தது. சனிக்கிழமை காலை 8:30 மணி தொடங்கி கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
‘ஃபெங்கல்’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் தன் ஒரு மாத ஊதியம் 80,000 ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நேற்று தலைமை செயலர் முருகானந்தத்திடம் வழங்கினார்.
Comments are closed.