சூப்பர் ஹிட் கிளாசிக் திரைப்படம் தளபதி ரீ-ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த மற்றும் மம்முட்டி நடித்த தளபதி திரைப்படம் கடந்த நவம்பர் 1991 தீபாவளி தினத்தன்று வெளியானது. வெளியாகி மிகபெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. வசூல் மற்றும் விமர்சனம் ஆகியவற்றில் வெற்றிப்பெற்றது. இந்த திரைப்படம் பல விருதுகளை வென்றது.

இந்தநிலையில் தளபதி திரைப்படம் டிசம்பர் 12 2024 ரீரிலீஸ் ஆகுகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாள் மற்றும் அவரின் 50 தாம் வருட திரைப்பட விழாவை கொண்டாடும் வகையில் வருகிற டிசம்பர் 12ம் தேதி தளபதி படம் ரீ ரிலீசாகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா ஆகியோர் நடித்த படம் இது. இசை ஞானி இளையராஜா இசையில் உருவானதளபதிமெகா ஹிட் திரைப்படத்தை 4 கே டிஜிட்டல் வடிவமாக மாற்றம் செய்து எஸ்எஸ்ஐ புரொடக்ஷன் தமிழ் நாட்டில் 150க்கு மேலான திரையரங்குகளில் மிக பெரிய அளவில் ரீரிலீஸ் செய்கிறது.

- Advertisement -

Comments are closed.