திருச்சியில் ஆரஞ்சு எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரமாக ஒரே இடத்தில் நீடித்து வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது, மேலும், திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.