திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 12.12.2024 முதல் 15.12.2024 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய, காவல்துறை சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. குழந்தைகள் மற்றும் வயதானவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 116 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடங்கள் தொடர்பாக தகவலுக்கு WhatsApp உதவி எண்: 9363622330-க்கு தொடர்பு கொள்ளலாம். பக்தர்களிடம் பணம் வசூலிக்கும் குற்றச்செயல்களை கண்காணிக்க காவல் அதிவிரைவுப் படைகள் (QRT) ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கால்நடைகளை பக்தர்களுக்கு இடையூறாக உலாவ விடக்கூடாது. உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது செல்போன், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். May I Help You Booth மற்றும் காவல் உதவி மையங்களை அணுகி தேவையான உதவிகளை பெறலாம்.
Comments are closed.