ரூ. 34,999 விலையில் ப்ளிப் போன் அறிமுகம்: டெக்னோ…!

டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேண்டம் V2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்- பேண்டம் V போல்டு 2, பேண்டம் V ப்ளிப் 2 மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய பேண்டம் V2 சீரிஸ் மாடல்களில் ஏர்செல் பேட்டரி தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய – குறைந்த எடையிலான டிசைன், அதிநவீன ஏ.ஐ. வசதிகளை கொண்டிருக்கிறது. பேண்டம் V போல்டு 2 ஸ்மார்ட்போனில் 7.85 இன்ச் மெயின் ஸ்கிரீன், 6.42 இன்ச் கவர் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. பேண்டம் V ப்ளிப் 2 மாடலில் 6.9 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, 3.64 இன்ச் கவர் ஸ்கிரீன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 8 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. டெக்னோ பேண்டம் V ப்ளிப் 2 மாடலின் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் V போல்டு 2 விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை என்று டெக்னோ அறிவித்து இருக்கிறது. இரு மாடல்களின் விற்பனை டிசம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

Comments are closed.